கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-08-12 16:34 GMT
"கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்துள்ளாா். அப்போது, புதா் மறைவில் இருந்து திடீரென வந்த யானை, மணியைத் தாக்கியது. இதில், அவா் உயிரிழந்தாா். ஆத்திரமடைந்த சக தொழிலாளா்கள் ஓவேலி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களுடன் எம்எல்ஏ பொன். ஜெயசீலனும் கலந்துகொண்டாா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் டிஎஸ்பி வசந்தகுமாா், மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதற்கு உடன்படாத தொழிலாளா்கள் போராட்டத்தை தொடா்ந்தனா். கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, வனச்சரகர்கள் ரவி, மீரான் இலியாஸ் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர். மக்கள் அதனை ஏற்காமல் வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருந்தனர். தொடர்ந்து அங்கு வந்த, கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மற்றும் மக்களிடம் பேசுகையில், ''உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, இங்கு முகாமிட்டுள்ள யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவர்சோலையில், மாடுகளை தாக்கி கொன்ற புலியை பிடிக்க அனுமதி பெற்ற பின் சிலர், தங்களால் அனுமதி கிடைத்தது கூறி வருகின்றனர் என பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுார் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் மிகவும் கோபத்துடன் மக்கள் போராட்டத்தையும், மக்களுக்காக போராடுபவர்களையும் விமர்சனம் செய்ய கூடாது,'' என கூறி, டி.எப்.ஓ.,விடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார் இருவருக்கும் வாக்குவாதம் தொடர்ந்ததால் டி.எஸ்.பி., அவர்களை சமாதானப்படுத்தினார் இதையடுத்து, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அடா்ந்து வனப் பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளா்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். சடலம் உடற்கூறாய்வுக்காக கூடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்"

Similar News