மாயார் சாலையில் கம்பீரமாக உலா வந்த புலி...
சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கண்டு ரசிப்பு..;
மாயார் சாலையில் கம்பீரமாக உலா வந்த புலி... சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கண்டு ரசிப்பு... நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வனப்பகுதிகள் முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வான விலங்குகள் சாலையோரங்களில் உலா வருகின்றன. இவ்வாறு சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில் கம்பீரத் தோற்றத்துடன் புலி ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கண்டு ரசித்ததோடு, தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மழையின் காரணமாக வனப்பகுதிகளில் இருந்து சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருவதால் அதனை சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.