வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க கோரிக்கை;

Update: 2025-08-14 16:28 GMT
"நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தனியாா் தோட்டத்தில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமை சுற்றி வருவதால் தேயிலை விவசாயிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப்பு மற்றும் தேயிலைத் தோட்டங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் குன்னூா் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமை ஒன்று சுற்றி வருவதாலும், தேயிலை செடிகளை ஆக்ரோஷத்துடன் சேதப்படுத்தி வருவதாலும் விவசாயிகள் மிக கவனித்து பணிக்குச் செல்லுமாறு வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.

Similar News