சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உதகை மத்திய பேருந்து நிலையம், மலை ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை...;

Update: 2025-08-14 16:39 GMT
நீலகிரி சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மத்திய பேருந்து நிலையம், மலை ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை... நாடு முழுவதும் நாளை 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், மலை ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என். எஸ் நிஷா தலைமையில், மோப்பநாய் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News