பார்சன் வேலி பகுதியில் பகல் நேரத்தில் நடமாடிய சிறுத்தையால் – மக்கள் கிலி நீலகிரி மாவட்டத்தின் வனபகுதிகள் அதிகம் வாழும் பார்சன் வேலி பகுதியில், பகல் நேரத்திலேயே சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி இன்று காலை பார்சன்வேலி ஒட்டிய காட்டு எல்லையில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியில் வந்துதோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி நடந்துசென்றது. அந்த நேரத்தில் அருகிலிருந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், சிறுத்தையை கண்டதும் பதட்டத்துடன் பாதுகாப்பான இடங்களுக்கு பின்வாங்கினர். சிலர் தூரத்திலிருந்து கைப்பேசியில் சிறுத்தையின் நடமாட்டத்தை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். காட்சிகளில், சிறுத்தை அமைதியாக சாலையை கடந்து பக்கத்து மலைப்பகுதிக்குள் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. குடியிருப்பு பகுதிக்கு வனவிலங்குகள் அடிக்கடி நுழைவு அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. “கிராமத்திற்கு இவ்வளவு அருகில் பகல் நேரத்திலேயே சிறுத்தை வருவது அபூர்வம். குழந்தைகள், கால்நடைகள் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என மக்கள் கவலை தெரிவித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள், “பாச்சன் வேலி பகுதி காட்டு எல்லையுடன் சேர்ந்திருப்பதால், இரை தேடி சிறுத்தைகள் வருவது இயல்பானது. இருப்பினும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வனத்துறை ரோந்து வாகனங்கள் தற்போது அந்தப் பகுதியில் கண்காணிப்பை அதிகரித்துள்ளன” என தெரிவித்தனர். இந்தச் சம்பவம், வனவிலங்குகளின் இயல்பான வாழிடத்தைப் பாதுகாக்கும் தேவையை மீண்டும் நினைவூட்டுவதோடு, அப்பகுதி மக்களிடையே சிறுத்தை மீதான அச்சத்தையும் அதிகரித்துள்ளது.