சிறப்பாக செயல்பட்ட குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கினார்

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது.;

Update: 2025-08-15 14:09 GMT
சிறப்பாக செயல்பட்ட குன்னூர் நகராட்சி ஆணையாளருக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கினார் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செயல்படும் நகராட்சி ஆணையாளர் ,பேருராட்சி செயல் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கி கௌரவித்தார் நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திரதின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆடசியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுகொண்டார். பின்னர் பல்வேறு அரசு துறைகளிலும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும்.மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. வழங்கினார் சுதந்திர தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. இதேபோல் சிலம்பாட்டம், போதை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுற்றுச்சுழல் கலைநிகழ்ச்சி, நீலகிரி மாவட்ட மக்களின் கலாசார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ,அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்." விழாவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பாக செயல்படும்நகராட்சி பேருராட்சி செயல் அலுவலர்கள் அரசுதுறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.நற்சான்றிதழை வழங்கி கௌரவித்தார்

Similar News