தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சி;
தொடா் விடுமுறை காரணமாகவும், உதகையில் நிலவும் ரம்யமான கால நிலையை அனுபவிக்கவும் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை காண நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் மற்றும் சமவெளி பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதமான காலநிலை நிலவுவதால் இதனை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை சனிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. இங்குள்ள படகு இல்லம், ஆறாவது மைல், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா். இதன் காரணமாக உள்ளூா் மக்கள் மற்றும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்."