மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது காட்டு யானை துரத்தி தாக்கியதில் காயமடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-08-17 11:13 GMT
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி எல்லமலையை சேர்ந்த நவ்ஷாத் என்பவர் சுபாஷ் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது காட்டு யானை துரத்தி தாக்கியதில் காயமடைந்தார். காயமடைந்தவரை மீட்டு பெரிந்தல்மன்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் யானை மோட்டார் சைக்கிளை நாசப்படுத்தி உள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதியில் ஒருவரை காட்டுயானை தாக்கி இறந்ததை அடுத்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர், எப்போதும் போல் வனத்துறை வாக்குறுதிகளை மட்டும் வாரி கொடுத்துவிட்டு தற்காலிகமாக அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து சென்றனர். மீண்டும் யானை தாக்கிய இந்த விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...

Similar News