ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் ராணுவத்தினரின் மாபெரும் பேண்டு வாத்திய கலை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது........

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு நெகிழ்ச்சி;

Update: 2025-08-17 12:14 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் ராணுவத்தினரின் மாபெரும் பேண்டு வாத்திய கலை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது........ நாடு முழுவதும் நேற்றைய தினம் 79- வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ முகாம் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி பகுதியில் காலை முதலே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போர் நினைவு தூண் அருகே ராணுவத்தினரின் மாபெரும் பேண்ட் வாத்திய கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் சிம்போனி, பேக் பைபர், புல்லாங்குழல், போன்றவர்களை பயன்படுத்தி இசை நிகழ்ச்சி நடத்தினர். ஆப்ரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் தேசிய கீதம், மற்றும் தேசப்பற்று உள்ள பாடல்களை ராணுவத்தினர் பாடி மகிழ்ந்தனர் இதில் சிறப்பு விருந்தினராக எம் ஆர் சி கமாண்டட் கிரிஷ் நேந்து தாஸ்,மற்றும் சுபைதார் மேஜர் ராஜு உத்தார்,சுபேதார் மேஜர் பிரதிக்ஷன், சுபேதார் ரவிக்குமார், கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் ராணுவத்தினரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கண்டு ரசித்தனர்.

Similar News