தமிழியக்கம் மற்றும் நீலகிரி கல்வி அறக்கட்டளை வாழ்வியல் நன்னெறி வகுப்பு.
பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்;
தமிழியக்கம் மற்றும் நீலகிரி கல்வி அறக்கட்டளை வாழ்வியல் நன்னெறி வகுப்பு. உதகமண்டலம் நகராட்சி காந்தள் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் மாணவர்களுக்கான வாழ்வியல் நன்னெறி வகுப்பு நடைபெற்றது. நீலகிரி கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஜாபர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விந்தினர்களாக சோமசுந்தரம் திருக்குறள் வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றி , மாணவர்கள் இளம் வயதிலிருந்தே புத்தகங்ளைச் சேகரித்து ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்றார். மருத்துவர் முகமது ஈசா போட்டித் தேர்வுகளை கையாளும் உத்திகள் குறித்து விளக்கிக் கூறினார். நூலகர் வாசகர் வட்டத் தலைவி நல்லாசிரியர் அமுதவல்லி தமிழும் தொன்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் 60 மாணவர்களுக்கு எழுதுகோல் மற்றும் பேஜ் வழங்கப்பட்டது. நூலகர் காயத்திரி நன்றி கூறினார். தமிழியக்கம் மாவட்ட செயலாளர் புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.