ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பொதுமக்கள் கவனத்துடன் இருக்க கோரிக்கை;

Update: 2025-08-18 15:56 GMT
கூடலூர் நீலகிரி கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாயாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலத்திற்கு மேல் வெள்ள நீர் செல்வதால், தெங்குமராஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நீர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஆற்றிற்கும் செல்வது குறிப்பிடத்தக்கது!

Similar News