சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு;
காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர் இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் கடந்த மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தாக்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாகிய நிலையில் இது குறித்து ஊர் நல அலுவலர் பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வீரம்மாள் இன்று வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்