பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை.......
பொதுமக்கள் அச்சம்;
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்குடியினர் கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை....... சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம் சிறுமுகை சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதாலும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பாதையில் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் இன்று காலை குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை குறும்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றைக் காட்டு புகுந்தது இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்தனர் சிறிது நேரத்திற்கு பிறகு காட்டு யானை தேசிய நெடுஞ்சாலையில் திரும்ப சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர் மேலும் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் காட்டு யானைகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ வீடியோ பதிவு செய்யவோ கூடாது என்று குன்னூர் வனத்துறையினர் அறுவறுத்தி வருகின்றனர்.