இளம் பெண்ணை வெட்டி கொலை செய்த இளம் சிறார்கள்
தூத்துக்குடியில் திரேஷ் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி என்ற இளம் பெண்ணை இளம் சிறார்கள் இருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு தாளமுத்து நகர் காவல் துறையினர் விசாரணை;
தூத்துக்குடியில் திரேஷ் நகர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சக்தி மகேஸ்வரி என்ற இளம் பெண்ணை இளம் சிறார்கள் இருவர் வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு தாளமுத்து நகர் காவல் துறையினர் விசாரணை தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள திரேஸ் நகரை சேர்ந்தவர் ராமசுப்பு இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் சக்தி பரமேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமை காவலர் ராஜேந்திரன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுஇருவரும் பழகி வந்துள்ளனர். காவலர் ராஜேந்திரனுக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இருந்த கள்ளத்தொடர்பு ராஜேந்திரனின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து ராஜேந்திரன் மனைவி மற்றும் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடன் உள்ள தொடர்பை துண்டிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர் மேலும் சக்தி மகேஸ்வரியிடம் காவலர் ராஜேந்திரனனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர் ஆனால் சக்தி மகேஸ்வரி தொடர்பை துண்டிக்க மறுத்ததாக கூறப்படுகிறது இதைத்தொடர்ந்து இன்று வீட்டில் சக்தி மகேஸ்வரி தனியாக இருக்கும்போது அங்கே வந்த காவலர் ராஜேந்திரனின் மகன் ஆன இளம் சிறார் மற்றும் அவரது நண்பரான மற்றொரு இளம் சிறார் ஆகியோர் சக்தி மகேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர் இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் துறையினர் கொலை செய்யப்பட்ட சக்தி மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதைத்தொடர்ந்து மோப்பநாய் ஆகிய வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர் மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல் துறையினர் ஒரு இளம் சிறாரை பிடித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது தூத்துக்குடியில் காவலரான தந்தையுடன் உள்ள கள்ளத்தொடர்பை விட மறுத்த பெண்ணை காவலரின் மகன் உள்ளிட்ட இரண்டு இளம் சிறார்கள் இரண்டு பேர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.