எஸ் பி அலுவலகத்தில் அனுமதி கேட்டு தவெக வினர் மனு
தருமபுரியில் நவம்பர் 1-ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு;
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் 1-ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வருகை தர உள்ளார். இதற்காக காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர் தாபா சிவா நேற்று திங்கட்கிழமை மாலை தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி என்பதால் ஒட்டுமொத்த காவலர்களும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். நவம்பர் ஒன்றாம் தேதி பாமக தலைவர் அன்புமணி நடைப்பயணத்தை தருமபுரியில் நிறைவு செய்கிறார். நவம்பர் 2,3 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிறார். ஆகவே இந்த நான்கு நாட்களில் காவல்துறை பாதுகாப்பு தர இயலாத சூழல் இருந்து வருகிறது. எனவே தருமபுரி மாவட்டத்திற்கான தேதியை மாற்றி கொடுக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனை எடுத்து தங்களது கட்சி தலைமைக்கு தெரிவித்து முடிவை சொல்வதாக தவெக-வினர் தெரிவித்துள்ளனர். விஜய் வருகைக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்திற்கு 200க்கும் மேற்பட்ட தவெக-வினர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.