ஜெயங்கொண்டம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் நகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.;

Update: 2025-09-17 16:20 GMT
அரியலூர், செப்.17- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில்,#உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாமினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் R.ஷீஜா,வட்டாட்சியர் சம்பத்,நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார்,துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி,நகராட்சி ஆணையர் அசோக்குமார் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News