உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், திருச்செங்கோடு வட்டாரம் மற்றும் பரமத்தி பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆய்வு மேற்கொண்டார்.;
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம் மற்றும் பரமத்தி பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், , மாவட்ட ஆட்சியர் .முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.நாமக்கல் மாவட்டத்தில், இன்றைய தினம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமானது, நாமக்கல் மாநகராட்சி ரெட்டிப்பட்டி சமுதாயக்கூடம், மோகனூர் பேரூராட்சி மசடாச்சி அம்மன் திருமண மண்டபம், பரமத்தி பேரூராட்சி வெங்கடேஸ்வரா சமுதாயக்கூடம், புதுச்சத்திரம் வட்டாரம் தங்கம் மஹால், சேந்தமங்கலம் வட்டாரம் பொம்மசமுத்திரம் சமுதாய நலக்கூடம், திருச்செங்கோடு வட்டாரம் சித்தாளந்தூர் அங்காளம்மன் நலன் சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நல ஆணையர் மு.ஆசியா மரியம், திருச்செங்கோடு வட்டாரம் சித்தாளந்தூர் அங்காளம்மன் நலன் சமுதாய நலக்கூடம் மற்றும் பரமத்தி பேரூராட்சி வெங்கடேஸ்வரா சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.மேலும், உடனடி தீர்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, மருத்துவக் காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்பிடச் சான்று, சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த ஆய்வுகளின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சு.வடிவேல், திருச்செங்கோடு சார் ஆட்சியர் அங்கீத் குமார் ஜெயின் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.