கெலவரப்பள்ளி அணைக்கு நீர் திறப்பு-வெள்ள அபாய எச்சரிக்கை.
கெலவரப்பள்ளி அணைக்கு நீர் திறப்பு-வெள்ள அபாய எச்சரிக்கை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 1003 கனஅடி நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் இன்று காலை 260 கனஅடி நீர் அதிகரித்து விநாடிக்கு1290 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்தது ள்ளது. இதனால் அணையின் பாதுகாப்புக் கருதி 1290 கனஅடிநீர் அணையில் உள்ள 5 மதகுகளின் வழியாக திறந்து விடப்படுவதால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.