தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.;
கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியை திறக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையில் இருந்து நீர்திறப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.