வெள்ளையம்பதி:குண்டு குழியுமாக உள்ள சாலை பொது மக்கள் அவதி.
வெள்ளையம்பதி:குண்டு குழியுமாக உள்ள சாலை பொது மக்கள் அவதி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி அடுத்துள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் இருந்து சுப்பர மணி நகர் வரை செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளதால் பொது மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதால் இருசக்கர வாகனங்கள், மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்ல முடியாமல் அதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.