ஊத்தங்கரை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு.
ஊத்தங்கரை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு.;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள காட்டனூரை சேர்ந்தவர் சாந்தகுமார் டிரைவர். இவருடைய மனைவி மோனிஷா. இவர்களுக்கு 21/2 வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. அந்த நிலையில் இவர்கள் கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனது தாய் வீடான பிள்ளியானுாருக்கு சென்றனர். இவர்களின் 21/2 வயதான ஆண் குழந்தை அம்ரிஷ், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீர் என்று குழந்தை காணததால் அருகில் உள்ள இடங்களில் தேடிபார்த்த போது வீட்டின் அருகே தண்ணீர் தொட்டியில் இருப்பதை பார்த்து உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதித்ததில் குழந்தை ஏற்கேனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாமல்பட்டி போலீசார்குழந்தையில் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.