முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த மீன்சுருட்டி மாணவர்கள் விடுதியை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த மீன்சுருட்டி மாணவர்கள் விடுதியை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்;
அரியலூர் செப்.23 - தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர்,சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி கட்டடத்தினை திறந்து வைத்தார். மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவின் காணொளிக்காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, கலந்துகொண்டார்.அதனைத்தொடர்ந்து மீன்சுருட்டி சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியில் மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ)சுமதி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திருவருள், விடுதி காப்பாளர் ஆனந்த், சமூக ஆர்வலர் ராஜா பெரியசாமி மற்றும் அரசு அலுவலர்கள், விடுதி மாணவர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.