அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காட்டுக்குறிங்கம் பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்திய பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தனி நபர் மீது நடவடிக்கை எடுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2025-09-23 09:09 GMT
அரியலூர்,செப்.23- அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பிரிங்கியம், பாலக்கரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை அடைத்து கம்பி வேலி அமைத்த தனி நபரை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமித்த தனிநபர் மீது நடவடிக்கை எடுத்து பாதையை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண் பாண்டியன் தலைமை வைத்தார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைசாமி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Similar News