ஜெயங்கொண்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ.
ஜெயங்கொண்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.;
அரியலூர்,23 - ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஒன்றியம், 1).கல்லாத்தூர் ஊராட்சியில்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2025-2026-ன் கீழ்,ரூ 11.88 லட்சம் மதிப்பீட்டில்,கல்லாத்தூர் தெற்கு முதலியார் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்தல், 2).இறவாங்குடி ஊராட்சியில்,நபார்டு திட்டம் 2025-2026-கீழ்,ரூ 238.70 லட்சம் மதிப்பீட்டில்,மாதாபுரத்தில் முருகன்கோட்டை ஓடையில்,புதிய பாலம் அமைத்தல்,ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி (வ.ஊ),உதவி பொறியாளர் காயத்திரி, ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் இரா.மணிமாறன் மற்றும் அரசு அலுவலர்கள்,ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.