போச்சம்பள்ளி அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு.
போச்சம்பள்ளி அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எம்.ஜி.அள்ளி அடுத்த கங்காவரத்தைதச் சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சிவகாமி (45) சிவகாமி, அண்மையில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகளின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு வீட்டுக்குள் சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த நான்கு கிராம் தங்க நகை, மற்றும்10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருட்டு போனது தெரியவந்தது.இது குறித்த புகாரின்பேரில், போச்சம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்