தேன்கனிக்கோட்டை: டூவீலர் மீது பேருந்து மோதி மருந்து விற்பனையாளர் உயிரிழப்பு.
தேன்கனிக்கோட்டை: டூவீலர் மீது பேருந்து மோதி மருந்து விற்பனையாளர் உயிரிழப்பு.;
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சொக்கரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் பிரவீன்குமார் (36) இவர் தனியார் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இவர் தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று மருந்து ஆர்டர் வாங்கிக்கொண்டு டூவீலரில் ஒசூருக்கு சென்றுள்ளார். அப்போது பெண்ணங்கூர் பகுதியில் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றார். அப்போது எதிரே வந்த தனியார்போருந்து டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்தத தேன்கனிக்கோட்டை போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.