காவேரிப்பட்டினம் அருகே போலி மருத்துவர் கைது.
காவேரிப்பட்டினம் அருகே போலி மருத்துவர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் சோலை நகர் சேர்ந்தவர் சுகுமார்(41) இவர் காவேரிப்பட்டிணம் தாசம்பட்டி ஜங்ஷன் ரோடு பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இவர் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக வந்த புகாரின் பேரில் தலைமை மருத்துவர் நாராயணசாமி மற்றும் மருத்துவக் குழுவினர் இது குறித்து காவேரிப்பட்டிணம் போலீசில் புகார் கொடுத்தனர்அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுகுமாரை கைது செய்தனர் மேலும் அவரது மருந்து கடைக்கு செல் வைத்தனர்.