போச்சம்பள்ளி: குப்பைகளை அகற்ற பொதுமக்களின் கோரிக்கை.
போச்சம்பள்ளி: குப்பைகளை அகற்ற பொதுமக்களின் கோரிக்கை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய போச்சம்பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சேகரிக்கபடும் குப்பைகளை சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர். மேலும் மது பாட்டில்கள், கோழி கழிவுகள், கொட்டப்படுவதால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஊராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிகையாக உள்ளது.