ஓசூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.
ஓசூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசார் கொத்தகொண்டப்பள்ளி டி.வி.எஸ். சோத னைச்சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த இரண்டு பேரை போலீசார் நிறுத்தி அவர்களிடம் சோதனையிட்டதில் அவர்கள் நான்கு கிலோ கஞ்சா எடுத்து வந்தது தெரியவந்தது. இதை அடுத்து விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த பவன்குமார் (20) கணேஷ் தாஸ் (50) ஆகியோர் என்பதும், ஓசூர் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி இருப்பதும் தெரிந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.