பர்கூர் அருகே எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்.
பர்கூர் அருகே எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் பகுதியில் எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள், மண் மற்றும் உடை கற்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை கண்காணிக்க வருவாய்த்துறையினர் பல இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் சிகரலப் பள்ளி வி.ஏ.ஒ. ஜெயபிரகாஷ் அந்த பகுதியில் சென்றபோது அவரை கண்டதும் சிகரலப்பள்ளியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். அருகில் சென்று சோதனையிட்ட போது அதில் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.