போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.
போச்சம்பள்ளி அருகே சந்தூர் கிராமத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.;
கிருஷ்ணகிரி சந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனி கலந்து கொண்டு வேலை வாய்ப்பு வழங்க இளைஞர்களிடம் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.இதில்40 க்கும் மேற்பட்ட பெண்கள் தேர்வாகி பணி ஆணை பெற்றுக் கொண்டனர். வேலைக்கு தேர்வானவர்களுக்கு கம்பெனி விவரம் பேருந்து வசதி வேலை பற்றிய தகவல் முகாமில் வழங்கப்பட்டது. இந்த முகாமில் ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் தனியார் கம்பெனி அலுவலர்கள் மணிகண்டன் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.