சூளகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
சூளகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து;
சூளகிரி அருகே பாலம் அமைக்கும் பணிகள் வருவதால் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தினம் தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த நான்கு லாரிகள், ஒரு கேரள அரசு பேருந்து என 5 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்து அடுத்து மோதிக் கொண்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.தகவல் அறிந்து வந்த இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சீர்செய்தனர்.