ஊத்தங்கரை அருகே ஆசிரியர் இடமாற்றத்தால் பள்ளி மாணவர்கள் போராட்டம்.

ஊத்தங்கரை அருகே ஆசிரியர் இடமாற்றத்தால் பள்ளி மாணவர்கள் போராட்டம்.;

Update: 2025-09-26 04:16 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திருவனப்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 6- முதல் 10-ஆம் வகுப்பு வரை 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த நிலையில் இங்கு பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் பள்ளி அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "எங்கள் ஆசிரியர்கள் திரும்ப வந்தால் மட்டுமே பள்ளிக்கு வருவோம்" என மாணவர்கள் கோஷமிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

Similar News