ஒசூரில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.
ஒசூரில் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரௌடி உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஒசூர் மாநகர போலீசார் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போதுஅங்கு நின்ற இரண்டு பேரிடம் சோதனை செய்தபோது அவர்கள் 550 கிராம் கஞ்சா மற்றும் கத்தி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலிசார் விசாரணையில், அவர்கள் ஒசூர் பார்வதி நகரைச் சேர்ந்த ரௌடி பிரகாஷ் என்கிற பக்காபிரகாஷ் (34) கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்த சுதீப் (25) என தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.