ஆண்டிமடம் ஒன்றியத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களை கண்டுபிடிக்கும் பணி
ஆண்டிமடம் ஒன்றியத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.;
அரியலூர் செப்.29- ஆண்டிமடம் ஒன்றியம், 2024_25 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து உயர் கல்வியில் சேராத பூவாணிபட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் பயின்ற திலகர் நகரைச் சார்ந்த தமிழ் என்ற மாணவனையும், அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டிமடம் தெற்கு தெருவை சார்ந்த ஹர்ஷினி என்ற மாணவியையும் அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்க அறிவுரை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை எண் 201க்கு வருகை புரிய கூறப்பட்டது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆண்டிமடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ், மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இரவிச்சந்திரன், ஆகிலா,சரிதா, சாத்தியபாமா, ஆசைதம்பி,உத்திராபதி ஆகியோர் களப்பணியில் ஈடுபட்டனர். .