தேன்கனிக்கோட்டை அருகே அடையாளம் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

தேன்கனிக்கோட்டை அருகே அடையாளம் வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-09-30 02:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள பென்சிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (50) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை தனது மகள் ரேணுகா (23) மருமகன் சகாதேவன் (25) உறவினர் சிவருத்திரன் (13) 4 பேரும் ஒரே டூவீலரில் தேன்கனிக்கோட்டைக்கு வந்த போது ஓசட்டி ஏரி அருகில் செல்லும் போது எதிரே வந்த அடையாளம் தெரியதா மற்றேரு டூவீலரில் மோதியதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் பற்றி விசாரணை நடத் வருகிறார்கள்.

Similar News