ஊத்தங்கரை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு.

ஊத்தங்கரை அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு.;

Update: 2025-09-30 02:34 GMT
தர்மபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரண் (25) இவர் ஊத்தங்கரை அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது சிறுமியை கடந்த 14-ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் காந்திமதி இது பற்றி ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார்அளித்தார். அதன்பேரில் போலீசார் சரண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

Similar News