ஜெயங்கொண்டத்தில் அதிமுக நகர செயலாளர் நகர மன்ற உறுப்பினருமான பிஆர் செல்வராஜ் இல்ல மஞ்சள் நீராட்டு விழா :  முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேரில் வாழ்த்து

ஜெயங்கொண்டத்தில் அதிமுக நகர செயலாளர் நகர மன்ற உறுப்பினருமான பிஆர் செல்வராஜ் இல்ல மஞ்சள் நீராட்டு விழா :  முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.;

Update: 2025-10-05 13:53 GMT
அரியலூர், அக்.5- ஜெயங்கொண்டம் அதிமுக நகர செயலாளர் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வருகை தந்து வாழ்த்தினார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர  அதிமுக செயலாளரும்,  நகர் மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செல்வராஜ் இல்ல மஞ்சள் நீராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் வருகை தந்து  விழாச்செல்வி  பிரியதர்ஷினியை வாழ்த்தினார். அப்போது அரியலூர் மாவட்ட  செயலாளரும், முன்னாள் அரச தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏவும்,மாவட்ட அவைத் தலைவருமான ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், அதிமுக கட்சி அமைப்பு செயலாளர்கள் ஆசைமணி, மகேந்திரன், புவனகிரி எம் எல்.ஏ அருள்மொழிதேவன் சிதம்பரம் எம் எல் ஏ பாண்டியன்,  முன்னாள் எம்எல்ஏ,  எம்பி மற்றும் மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்கச்சமுத்து, ஒன்றிய செயலாளர்கள் கல்யாணசுந்தரம், விக்ரமபாண்டியன், மருதமுத்து மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் கவுன்சிலர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வரவேற்று நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பி.ஆர் செல்வராஜ் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாசெல்வி பிரியதர்ஷணியை வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கு  இந்திராகாந்தி செல்வராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக  அதிமுக நகர செயலாளரும், நகர மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செல்வராஜ் அனைவரையும்  வரவேற்றார். முடிவில் டாக்டர் ஆகாஷ்செல்வராஜ்  நன்றி தெரிவித்தார்.

Similar News