கட்டடத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

திருமானூரில் கட்டடத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்;

Update: 2025-10-06 09:33 GMT
அரியலூர்,அக்.6- கட்டடத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூர் மாவட்டம், திருமானூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர் சங்க மாவட்ட மற்றும் கிளை வளர்ச்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்க: நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நல வாரியத்தில், கேட்பு மனு மீது  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.முருகானந்தம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஆர்.தில்லைவனம் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் ஜீவா, மாவட்ட பொருளாளர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News