ஜெயங்கொண்டம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஜெயங்கொண்டம் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டிற்காக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.;
அரியலூர், அக்.7- தீபாவளி பண்டிகையை ஒட்டி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, விருத்தாசலம் - கும்பகோணம் மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கழுவந்தோண்டி மேம்பாலத்தின் கீழ் நான்கு வழி தடத்திலும் குற்றங்களை கண்காணிக்கும் வகையில் புதிதாக 6 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும், திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை சின்னவளையம் பஸ் ஸ்டாப் அருகில் 4 புதிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் தீபாவளி பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் பல்வேறு குற்ற சம்பவங்களிலிருந்து குற்றவாளிகள் கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கும் வகையிலும் கழுவந்தோண்டி பைபாஸ் , சின்னவளையம் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட 2 இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த 10 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். உடன் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிசக்கரவர்த்தி மற்றும் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் பாலாஜி சப் இன்ஸ்பெக்டர்கள் நெடுஞ்செழியன் உள்ளிட்ட போலீஸார்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து போலீசாரிடம் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி. தீபாவளி பண்டிகையையொட்டி குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் பொதுமக்களிடமிருந்து வரும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.