ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எஸ்பி திடீர் ஆய்வு.
ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
அரியலூர், அக்.7- ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் பா.சாஸ்திரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸாரர்களின் நலன் குறித்து விசாரித்துடன் கோப்புகளை முறையாக பராமரிக்கவும்,. போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்கவும், புகார் கொடுக்க வரும் புகார்தாரர்களை கண்ணியமாக நடத்த வேண்டும், போலீஸ் நிலையத்திற்கு வழக்குகளை உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என அறிகுறித்தியவுடன் போக்சோ உள்ளிட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் நிலை குறித்து கேட்டறிந்த, பின்னர் அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க ஆலோசனை வழங்கினார்..ஆய்வின் போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சக்கரவர்த்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி, சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆகியோர் உடன் இருந்தனர்.