ஜெயங்கொண்டத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு அனைத்து லயன் சங்கங்களின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்.*

ஜெயங்கொண்டத்தில் உலக மனநல தினத்தை முன்னிட்டு அனைத்து லயன் சங்கங்களின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2025-10-09 11:23 GMT
அரியலூர், அக்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்  அக்டோபர் 10 உலக மனநல தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் உள்ள அனைத்து லயன் சங்கங்கங்களின் சார்பில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார்.  ஊர்வலத்தில் மன ஆரோக்கியம் மற்றும் நல வாழ்வு என்னும் தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி அண்ணாசிலை, கடைவீதி,  நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று பஸ்  நிலையத்திற்கு வந்து முடிவடைந்தது. ஊர்வலத்தில் காப்போம், காப்போம் மனநலம் காப்போம். நீக்குவோம் நீக்குவோம் மன அழுத்தத்தை நீக்குவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியவாறு மாணவர்கள் .ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தில் ஜெயங்கொண்டத்தில் உள்ள அனைத்து லயன் சங்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி மற்றும் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Similar News