அரியலூர் மாவட்ட ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்திப்பு
அரியலூர் மாவட்ட ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
அரியலூர், அக்.14- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரியலூர் மாவட்ட ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், ராஜா, கண்ணன், பாரதி, அன்பழகன், ஆறுமுகம், செல்வதுரை, ஜெயலட்சுமி, இணை அமைப்பாளர்கள் பழனிவேல் காந்திமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்து இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கட்சியின் மூவண்ண துண்டு அணிவித்து கௌரவித்தார்.