சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி மறைவு: அக்னி ராஜேஷ் இரங்கல்

தலைமலை அடிவாரம் சுற்றி தலைமலை சேவா ட்ரஸ்ட் உருவாக்கிய 27 கி.மீ கிரிவலப் பாதையை சாலையாக மாற்றிட சட்டமன்றத்தில் பேசி,இரண்டு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தந்த,சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.;

Update: 2025-10-23 07:34 GMT
சேந்தமங்கலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ மறைவுக்கு தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது...தலைமலை வளர்ச்சிப் பணிகளுக்காக நமக்கு உறுதுணையாக இருந்து, தலைமலை அடிவாரம் சுற்றி தலைமலை சேவா ட்ரஸ்ட் உருவாக்கிய 27 கி.மீ கிரிவலப் பாதையை சாலையாக மாற்றிட சட்டமன்றத்தில் பேசி,இரண்டு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி தந்த,சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி அவர்கள் (அக்டோபர் -23)காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.அண்ணாருடைய ஆத்மா சாந்தியடைய தலைமலை ஸ்ரீ சஞ்சீவி பெருமாளை தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Similar News