கட்டுமான பொறியாளர் கவுன்சில் உருவாக்க வேண்டும்: முதல்வருக்கு நாமக்கல் மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் வேண்டுகோள்.

குஜராத் மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டும், 2024 முதல் கர்நாடக மாநிலத்திலும் கட்டிட பொறியாளர் கவுன்சில் உருவாக்கி உள்ளது போல் தமிழகத்திலும் கட்டிட பொறியாளர் கவுன்சில் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;

Update: 2025-10-24 16:58 GMT
தமிழகம் முழுவதும் போலி பொறியாளர்களை ஒழிக்கும் வகையிலும் தரமான கட்டிடங்களை கட்டுவதற்கு வசதியாக திமுக அரசு கட்டுமான பொறியாளர்களுக்கான கவுன்சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்பொழுது கடந்த தேர்தலின் போது திமுக கொடுத்த தேர்தல் அறிக்கை 471-ன் படி கட்டடப் பொறியாளர் கவுன்சில் அமைத்திட வேண்டும், ஜல்லி, எம்.சாண்ட், பி சாண்ட் விலையை குறைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறியாளர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே பதிவு நடைமுறையை அமல்படுத்த வேண்டும், பொறியாளர்களின் பதிவு ஒரு முறை பதிவு செய்தால் ஆயுட்காலம் வரை செல்லத் தக்கதாகவும், மேலும் புதுப்பித்தல் அவசியம் இல்லை என்ற நடைமுறையை செயல்படுத்தி தர வேண்டும் என்றும்,
குஜராத் மாநிலத்தில் 2006 ஆம் ஆண்டும், 2024 முதல் கர்நாடக மாநிலத்திலும் கட்டிட பொறியாளர் கவுன்சில் உருவாக்கி உள்ளது போல் தமிழகத்திலும் கட்டிட பொறியாளர் கவுன்சில் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
எனவும் கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க செயலாளர் நேதாஜி, பொருளாளர் சகாதேவன், உடனடி முன்னாள் தலைவர் மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் இளமுருகன் ,இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News