கோவை கால்பந்து போட்டியில் மோதல் – மாணவர் தாடை முறிவு, நால்வர் மீது வழக்கு!
கால்பந்து போட்டியில் தகராறு – மாணவர் மீது தாக்குதல், மருத்துவமனையில் அனுமதி.;
கோவை கே.என்.ஜி. புதூர் தாரா ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டெல்லி தனியார் கல்லூரி மாணவர் கவின் (2ஆம் ஆண்டு), பூரணத்தின் அணியினரால் தாக்கப்பட்டு, இரும்பு ராடால் அடியுண்டு தாடை முறிவு ஏற்பட்டது. கவின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை அடுத்து, கவுண்டம்பாளையம் போலீசார் நால்வர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.