கோவை: நொய்யல் ஆற்றை கடந்த ஒற்றைக் கொம்பன் காட்டு யானை !
நொய்யல் ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற ஒற்றைக் கொம்பன் காட்டு யானை காட்சி வைரல்.;
தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் காட்டு யானை அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிபுரம் பகுதியில் ஊருக்குள் நுழைந்து மக்களை அலறவிட்ட ஒற்றைக் கொம்பன் காட்டு யானை, நேற்று முன்தினம் இரவு ஆலாந்துறை அருகே உள்ள இருட்டுப்பள்ளம் கிராமத்திற்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது.நேற்று அதிகாலை அந்த யானை நொய்யல் ஆற்றை கடந்து வனப்பகுதிக்குள் சென்ற காட்சிகள் அப்பகுதி மக்களால் செல்போனில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.