கோவை: நீர்நிலைகள், பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !
பெண்கள், குழந்தைகளுக்காக நீர்நிலை மற்றும் பறவை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.;
கோவை ஆனைகட்டி மலை பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி மையம் சார்பில், நீர் நிலைகள் மற்றும் பறவைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுண்டக்காமுத்தூர் செங்குளம் குளக்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர். பறவைகள் மற்றும் நீர்நிலை ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு, நீர் நிலைகளை பாதுகாப்பது, மேம்படுத்துவது, அதில் வாழும் பறவைகள் பற்றிய தகவல்களை விளக்கினர். பங்கேற்பாளர்கள் பைனாக்குலர் மூலம் பறவைகளை அவதானித்து, அவற்றின் தன்மைகள் பற்றி அறிந்தனர்.