கோவை: பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி
கூட்டணிகள் தேர்தல் நலனுக்காகவே உருவாகின்றன – வானதி சீனிவாசன் பேட்டி.;
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கரூர் துயரச் சம்பவம், கூட்டணி அரசியல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. தலைவர் விஜய் அங்கு சென்றது நல்ல விஷயம் தான். சி.பி.ஐ. விசாரணை நடைபெறுவதால் உண்மை வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. எந்தக் கட்சியையும் விமர்சிப்பதை பா.ஜ.க. தவிர்க்காது; ஆனால் விமர்சனத்தால் கூட்டணி பாதிக்கப்படாது. தேர்தல் நேரத்தில் கட்சிகள் யாரை தோற்கடிப்பது என்ற நோக்கில் கூட்டணிகளை அமைக்கின்றன. மத்தியில் பா.ஜ.க. வரக்கூடாது என்பதற்காகவே மற்ற கட்சிகள் ஒன்றிணைகின்றன. அதே சமயம், பாலக்காட்டில் காங்கிரஸ்–கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிரிகளாக இருந்தும், தமிழ்நாட்டில் கூட்டணியாக செய்கிறார்கள்; இது மதச்சார்பற்ற கூட்டணி எனப்படுவது கேள்விக்குறியே. முன்பு கரூரில் செந்தில்பாலாஜி குறித்து கடுமையாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர் தி.மு.க.வில் சேர்ந்ததும் அவரை தியாகி என புகழ்கிறார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.