ஜாதி வேறுபாடுகளை கடக்க ஆன்மீகமே வழி - வானதி சீனிவாசன் இந்த

வி.ஹெச்.பி. சார்பில் கோவை சூலூர் கண்ணம்பாளையம் முருகன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் பக்தர்களுடன் இணைந்து பாடிய எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்.;

Update: 2025-10-27 11:01 GMT
விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) சார்பில் கோவை வடக்கு மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி வேல் பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பங்கேற்று பக்தர்களுடன் இணைந்து கந்த சஷ்டி பாடல்களைப் பாடினார். பின்னர் பேசிய அவர், “கோயில்கள் மற்றும் அதன் சொத்துக்கள் மக்களின் சேவைக்கே பயன்பட வேண்டும். இறைவனுக்கு அளிப்பது மக்களுக்காகவே திரும்ப வருகிறது. ஆன்மீகம் தான் சமுதாயத்தில் உள்ள ஜாதி வேறுபாடுகளை கடக்க வழி. தீண்டாமை ஒரு பாவம் என்றே வி.ஹெச்.பி. நம்பிக்கை கொண்டுள்ளது,” எனக் கூறினார். மேலும், ஆன்மீகத்தின் மூலம் மனிதர்கள் தங்கள் கடமையை அறிந்து செயல்பட முடியும் என்றும், கந்த சஷ்டி விழாவை ஒரு குடும்ப விழாவாகக் கருதுவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Similar News